வாய்க்கால்களை துார்வார வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:

பாகூர் பகுதி இரண்டு முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாகூர் நகர் பகுதியில் செல்லும் வாய்க்கால்களை முழுவதுமாக துார்வாரி பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் வீடு கட்டம் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கியும், அதற்கான பணம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

மழை, காற்று போன்ற நேரங்களில் மின் தடை ஏற்படுவதை தடுக்க கூடுதலாக ஏ.பி.சி., கேபிள் வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போர்டுகளை ஸ்மார்ட் போர்டுகளாக மாற்ற வேண்டும். பாகூர் மூலநாதர் கோவில், பாகூர் மற்றும் மணப்பட்டு ஏரிகளை சுற்றுலா திட்டத்தில் சேர்க்க வேண்டும். எந்த வித கருத்து கேட்பு இல்லாமல், பட்டியலில் இருந்து, 35 விளையாட்டுகளை நீக்கி இருப்பது தவறான போக்கு. இதனை, மறுபரிசீலனை செய் ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement