தம்பதியை ஏமாற்றி நகை திருடிய இருவர் கைது
விழுப்புரம்: திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தை சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி சரசு,65; இவர் தனது கணவரோடு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இருவர், சரசு, தாண்டவராயன் ஆகியோரிடம் உங்களுக்கு முதியோர் உதவிதொகை பணம் வருகிறதா என கேட்டதோடு, வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் ஆதார் கார்டு கேட்டு, நகைகளை கழட்டி வையுங்கள் போட்டோ எடுக்க வேண்டும் என கூறி ஏமாற்றி, ஒன்றரை சவரன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிந்து நகைகளை திருடி விட்டு தப்பிய கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே புலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவானந்தன், 45; விருத்தாசலம் அருகே கஸ்பா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகுராமன், 39; என்பது தெரியவந்து அவர்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவி மரணத்தில் சந்தேகம் 28 ஆண்டுக்கு பின் கணவர் புகார்
-
'சிக்கனம் தேவை!'.. கிடைக்கும் நீரை சரியான முறையில் பயன்படுத்துவோம் : மேட்டூர் அணையை திறந்து வைத்து முதல்வர் விஜய் அறிக்கை
-
குருசுக்குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
-
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
-
அடையாளம் தெரியாத நபர் கொலை வழக்கில் 2 பேரை பிடித்து விசாரணை
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பாடப்பிரிவு விருப்பங்களை மாற்ற இன்று கடைசி
Advertisement
Advertisement