குருசுக்குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
புதுச்சேரி: குருசுக்குப்பம் பகுதியில், கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம், மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பம் பகுதி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இது தொடர்பாக, புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம், புதுச்சேரி வந்துள்ள மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் சிங் பாகேலை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர், ‘குருசுக்குப்பம் பகுதியில், தீவிரமடைந்து வரும் கடல் அரிப்பைத் தடுக்கவும், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நிதி மூலம் துாண்டில் வளைவு மற்றும் கற்கள் கொட்டும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தி, மத்திய இணை அமைச்சரிடம் கடிதம் அளித்தார். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார். செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு