மனைவி மரணத்தில் சந்தேகம் 28 ஆண்டுக்கு பின் கணவர் புகார்
பெங்களூரு: மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் பெயரில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் கூறி, 28 ஆண்டுகளுக்கு பின், 73 வயது கணவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு பசவேஸ்வர நகரை சேர்ந்தவர் பிரசாத், 73. மைசூரு நகரில் உள்ள கே.ஆர்., போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
பசவேஸ்வர நகரில் வசிக்கும் எனக்கும், மைசூரை சேர்ந்த கவுரிசங்கர் மகள் பத்மஜாவுக்கும், 1988ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், அமெரிக்காவில் வசித்து வந்தோம். 1998 டிச., 29ல் என் மாமனார் பிறந்த நாளுக்காக நாங்கள் இருவரும் பெங்களூரு வந்தோம்.
பின், நான் அமெரிக்கா சென்று விட்டேன். என் மனைவி, சில நாட்கள் மைசூரில், தன் தந்தையுடன் வசிப்பதாக கூறி சென்றார்.
மைசூரு சென்ற ஆறாவது நாள் என்னை தொடர்பு கொண்ட மாமனார், என் மனைவி பத்மஜா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த நான், என் மனைவிக்கு இறுதி சடங்குகள் செய்தேன்.
பத்மஜா மறைவுக்கு பின், திருமணமாகாத மூத்த மகள் சைலஜாவுடன், மாமனார் வசித்து வந்தார். 2010ல் மாமனார் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவரின் இறுதி சடங்கிலும் பங்கேற்றேன்.
அதன் பின் சில காலம் கழித்து, சைலாஜிவிடம் பேசும்போது, என் மாமனார் உயிருடன் இருந்தபோது, அவர் பெயரிலும், அவரின் மூன்று மகள்கள் சைலஜா, பத்மஜா, தனுஜா ஆகியோரின் பெயரில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது குறித்து கேட்டேன்.
என் மனைவி பத்மஜா இறந்த தகவல் வங்கிக்கும், பங்குகள் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனாலும், பத்மஜாவின் பங்குகள் போலி ஆவணங்கள் தயாரித்து பெற்று கொண்டதாகவும் கூறினார்.
அதிர்ச்சியடைந்த நான், இது குறித்து விசாரித்தபோது, பெங்களூரு கங்கொண்டனஹள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த், சுதா சுவாமி, பனசங்கரி ஸ்வேதா, சாமுண்டிபுரம் துவாரகநாத் ராவ், மோகன், ஹரிஷ், பத்மநாபா, நாகரத்னா, குண்டுராவ், துவாரகி ஆகியோர் முறைகேடு செய்தது தெரிய வந்தது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு