போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
புதுடில்லி: இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும், நம் இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தையும் உருவாக்க நாம் ஒன்றிணைவோம். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும். நாட்டை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு.
விழிப்புணர்வு
போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப்பழக்கத்தால் அவதிப்படும் தனிநபர்களுக்கு உதவ முன்வருபவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். போதைப்பொருளின் ஆபத்துகளை எடுத்துரைப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து பாடல்கள் மற்றும் சிறு நாடகங்களை உங்களால் உருவாக்க முடியுமா?
முக்கியத்துவம்
பிஎம் ஸ்வநிதி திட்டம், லட்சக்கணக்கான பெண் தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், தங்கள் குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது. தூய்மை என்பது மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இரவும், பகலும்!
புதிய முயற்சிகளை மக்களின் பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி. இந்த ஆண்டு நடந்த அமர்நாத் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்காக இரவும் பகலும் அயராது உழைத்தனர்.
பிரத்யேக வெப்சைட்
ஏகாதசியின் புனிதமான நாளில் மும்பையில் வசிக்கும் கிருஷ்ண சேஷாத்ரி பிரத்யேக வெப்சைட் உருவாக்கி இருக்கிறார். இவரது இந்த முயற்சி இந்திய வரலாற்றை சுவாரசியமான முறையில் அறிந்து கொள்ள உதவுகிறது. https://www.bharatrajya.com/ என்ற இணையதளத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட ஆண்டை தேர்வு செய்தால் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியை யார் ஆட்சி செய்து வந்தார்கள் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். நாட்டை தன்னிறைவு அடைந்ததாக மாற்றுவதற்கு உறுதியோடு இருக்க வேண்டும். நமது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நமது மரபுகளைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை; தமிழில் தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!
விரைவில் போதைப்பொருள் இல்லா இந்தியா; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஐயா குஜராத் துறை முகத்தை ஆய்வு செய்தல், சோதனை செய்தல், மற்றும் தடுத்தாலே போதும், இந்தியாவே போதை பொருள்கலீல் இருந்து விடுபடும்.
குஜராத் 2340 கிலோமீட்டர் கடல் சூழ்ந்த பகுதி. அருகில் பாக்கிஸ்தான் .
டாஸ்மாக் சரக்குகள் இனி ஊக்க பானம் அல்லது ஆறுதல் மருந்து என்று அழைக்கலாம்
All the best.But the most பவர்ஃபுல் countries like US are struggling against drugs.
தி.மு.க இல்லாத தமிழகமே. எங்கள் இலக்கு
மதிப்பிற்குறிய பிரதமர் அவர்களே , போதைப்பொருள் மாஃபியா கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அவனது வழக்கும் மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, உங்களால் எப்படி இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற முடியும்?
ஹி. ஹி.. சாராயம் ஓகே. குஜராத் லேயே கிஃப்ட் சிட்டிலேயே தொறந்து உட்டாச்சு.
"நல்ல படிக்கணும், போதை பழக்கம் ஒழிக்கணும், எல்லோரும் நலமாக இருக்கணும் என்று சொல்வது கூட இன்னார்தான் சொல்லணும்
உங்களுக்கு பிடிக்காத தலைவர்கள் எதையுமே சொல்ல கூடாது என்பதே தவறு.
உதயநிதி நண்பர் ஜாஃபர் சாதிக் இதை சொன்னால் ஓகே
இளைஞர்களை போதை பிடியிலிருந்து மீட்பது ரொம்ப கடினம்