வழிப்பறி வழக்கு: 6 பேர் மீது குண்டாஸ்

திருப்புவனம்:திருப்புவனத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருப்பாச்சேத்தியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி திருப்புவனம் வைகை ஆற்று கால்வாய் கரையில் டூவீலரில் செல்லும் போது ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் தாக்கி ரொக்க பணம், அலைபேசியை வழிப்பறி செய்தனர். திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து மணல்மேடு பாலகிருஷ்ணன் 27, முத்துகிருஷ்ணன் 19, செல்லப்பனேந்தல் ரித்தீஷ் குமார் 19, நிரஞ்சன் 21, ராமகிருஷ்ணன் 19, மணிகண்டன் 30, ஆகிய6 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சிவகங்கை எஸ்.பி., அபிஷேக் குப்தா பரிந்துரைப்படி கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

//

Advertisement