கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்

3 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., நமச்சிவாயம் மற்றும் போலீசாருக்கு சாமநாயக்கன்பாளையம் அருகே வீடுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வீரபாண்டி பாலமுருகன்,42, வெள்ளமடை சுரேஷ் குமார்,46, வீரபாண்டி விக்னேஷ்,33, ஆகியோர் தங்களது வீடுகளில், 20 கிலோ எடையுள்ள, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

40 லிட்டர் கள் பறிமுதல்


நீலம்பூர் அருகே, 40 லிட்டர் கள் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.

நீலம்பூர் அடுத்த சுப்பராயன்பாளையம் பகுதியில், நீலம்பூர் எஸ்.,ஐ பால கணேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சுப்பராயன் பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில், கள் விற்பனை செய்து கொண்டிருந்த சுந்தரம், 69 என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து, 40 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement