போக்சோவில் வாலிபர் கைது

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் வீரபத்திர வீதியை சேர்ந்தவர் திவாகர், 24; திருமணம் ஆகாதவர். ஏ.சி., மெக்கானிக். ஈரோட்டை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து திவாகரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement