தெருநாய் கடித்து ஆடுகள் பலி

சென்னிமலை:வெள்ளோட்டை அடுத்த வெங்கிட்டியம்பாளையம், கந்தன் காட்டில் வசிப்பவர் விஜயகுமார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கொட்டையில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. சில ஆடுகள் உயிருக்கு போராடியபடி கிடந்தன.
தெருநாய்கள் கடித்ததே காரணம் என தெரிய வந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ., மற்றும் கால்நடை அலுவலருக்கு தகவல் அளித்தார். உயிருக்கு போராடிய ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

Advertisement