கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பா.ஜ., இயக்குகிறது; காங்., நிர்வாகி சந்தேகம்

ஆத்துார்:சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், மத்திய அரசின் தொகுதி சீரமைப்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். காங்., தேசிய பொதுச்செயலர் செல்லக்குமார், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தேசிய பொதுச்செயலர் செல்லக்குமார் அளித்த பேட்டி:தொகுதி சீரமைப்பு மூலம் வடமாநிலங்களில் உள்ள, 5 மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். அதன்மூலம் பா.ஜ., வெற்றி பெற்றுவிடலாம் என்றும், தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணத்திலும் செயல்படுகிறது. பா.ஜ., ஆட்சி மீது தி.மு.க.,வுக்கு தற்போது கள்ளக்காதல் வந்துள்ளதால், மத்திய அரசு திட்டங்களை எதிர்ப்பதில்லை. கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியை, பா.ஜ., இயக்குவதாக சந்தேகம் உள்ளது. சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவியிடம், தி.மு.க., மேயர் ராமச்சந்திரன் நடந்து கொண்ட விதத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சையில் துணை மேயர்
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, தனக்கு வழங்கப்பட்ட அரசு காரில், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி வந்தார். இது பல்வேறு தரப்பில் விமர்சனங்களை கிளப்பி, சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

Advertisement