வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில், வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேளம்பாக்கம் ஊராட்சியில், கே.எஸ்.எஸ்., நகரை ஒட்டிய மயான பகுதியில், தலை சிதைத்து, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், வாலிபரின் சடலம் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கேளம்பாக்கம் துணை கமிஷனர் ஜான் விக்டர், இன்ஸ்பெக்டர் தமிழன்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார், இறந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் கேளம்பாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்த ஷாகுல் அமீது, 26, என்பதும், அவர் மீது, 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும், கிரேடு ஒன் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. பின் கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று, கடந்த 28ம் தேதி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, மயான பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தையூரை சேர்ந்த அருண், 31, ஸ்ரீகாந்த், 35, ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா, 32, கேளம்பாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 25 ஆகிய நான்கு பேரை கைது செ ய்து விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement