மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
உத்திரமேரூர்: மாகறல் பகுதியில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்லும் குடிநீரை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, வெங்கச்சேரி செய்யாற்றங்கரையில் இருந்து ஆழ்துளை குழாய் அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெங்கச்சேரியிலிருந்து நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில், மாகறல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தினமும் வீணாகி சாலையோரம் வழிந்தோடுகிறது. இதனால், கிராமங்களுக்கு குடிநீர் முழுமையாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, உடைந்துள்ள குழாய்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி
Advertisement
Advertisement