கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்

காஞ்சிபுரம்: 'கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், கட்டாயமாக ஆதார் நகலை இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு வெளியிட்ட செய்தி அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்போர், தங்களின் ஆதார் நகல்களை இணைக்க வேண்டும். எதிர்வரும், கூட்டுறவு சங்க நிர்வாக குழு தேர்தலுக்கு, வாக்காளர் பெயர் பட்டியலில் உறுப்பினர் பெயர்கள் இடம் பெற உள்ளன.

அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு உறுப்பினர்களாக இருப்போர், இன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தபாலிலும் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement