எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
உத்திரமேரூர்: எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கல்பட்டு இடையிலான அரசு பேருந்தை முறையாக இயக்கக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூரைச் சேர்ந்த சோழன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:
மதுராந்தகம் ஒன்றியம், எலப்பாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர் வழியாக தடம் எண் '77ஏ' என்ற அரசு பேருந்து, செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.
நீரடி, மணித்தோட்டம், தீட்டாளம், ராமாபுரம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து மூலம் உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்து சில மாதங்களாக, மாலை 5:20 மணிக்கு எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்காமல், மாறாக எலப்பாக்கம் - உத்திரமேரூர் - காஞ்சிபுரம் செல்கிறது. பின் அதே பேருந்து, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தடத்தில் இரவு வரை இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், சென்னையில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டு வந்து, இப்பேருந்தில் பயணித்து, தங்களுக்கு பகுதிகளுக்கு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ - மாணவியர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, தடம் எண் '77ஏ' அரசு பேருந்தை, எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கல்பட்டு தடத்தில் வழக்கம் போல இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
-
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
-
மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
-
கிரைம் கார்னர்
-
குறைந்த விலைக்கு மொபைல் தருவதாக விளம்பரம் செய்து மோசடி: 2 பேருக்கு 'காப்பு'
-
தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி