ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து நாட்டில் இருந்து, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று, 'ஏர் ஏசியா' விமானம் வந்தது.
அதில் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், வீல் சேரில் வந்துள்ளார். பார்ப்பதற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவர் போன்று காட்சியளித்தார். அவர், அதிகாரிகளிடம் 'சுங்கம் செலுத்துவதற்கான எந்த பொருளையும் நான் எடுத்து வரவில்லை' என கூறியுள்ளார். பின், 'க்ரீன் சேனல்' வழியாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார்.
எனினும் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவருக்கு எந்த உடல்நல குறைவும் இல்லை என்பது உறுதியானது. உடைமைகளை சோதனை செய்ததில் 3 கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; அந்த பயணியும் கைதானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement