ஆரோவிலில் கொலை வழக்கில் 4 பேர் கைது

விழுப்புரம்: ஆரோவில் அருகே முன் விரோதம் காரணமாக, வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் பிரவீன்குமார், 35; இவர், நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவருடன், ஆரோவில் அருகே மாட்டுக்காரன் சாவடி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக வழிமறித்த, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இது குறித்து, ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பட்டானுார் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஆகாஷ், 26; வேலு மகன் வசீகரன், 28; ரவிச்சந்திரன் மகன் மஞ்சுநாதன், 21; குமார் மகன் அரவிந்த், 25; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement