முதன்மை திட்டங்களுக்கு முன்னுரிமை: வேலைகளை விரைந்து முடிக்க உத்தரவு

கோவை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் ராகுல்நாத் தலைமையில், வளர்ச்சி பணிகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

''நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், மேம்பாட்டுப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதோடு, போதைப்பொருள் இல்லாத வளாகங்களாக மாற்றுவது முக்கியம். நேரடி நெல் கொள்முதல் மையங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். வருவாய்த்துறை, நில அளவைத் துறையில் இணையவழி பட்டா, பட்டா மாற்றம் குறித்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். வேளாண் துறையில் உழவர் பதிவேடு, பயிர் கணக்கெடுப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்,'' என, ராகுல்நாத் அறிவுறுத்தினார்.

கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆன்டனி பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement