அறிவை செழுமையாக்கும் திருக்குறள்: மொழிபெயர்க்க உஸ்பெக் பல்கலைக்கு மோடி வேண்டுகோள்

11


-நமது நிருபர்-




திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாமே? திருக்குறள் அறிவை செழுமையாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேசியதாவது: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள், ஆன்மிகம், தத்துவம், வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை கொண்டதாக திகழ்கிறது. வாழ்வின் அனைத்து வகையிலும் ஒரு உத்வேகத்தை அளித்து வருகிறது.

உங்கள் 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாமே? இது இங்குள்ள அறிவுச் செல்வத்தை உண்மையிலேயே செழுமைப்படுத்தும். மிகச் சிறந்த ஆற்றல் கொண்ட படைப்பான இதனுடன் நீங்கள் ஒரு நல்ல உறவை உணர்வீர்கள்.

தாஷ்கன்ட் பல்கலை வெறும் பட்டங்களைப் பெறும் ஒரு கல்வி நிறுவனம் மட்டுமல்ல; இது அறிவின் பரந்த கடலில் நம்மை முழுமையாக தயார்படுத்தி கொள்ள வாய்ப்பை வழங்கும், அர்ப்பணிப்புடன் கூடிய தேடலுக்கான ஒரு இடமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

Advertisement