இமயமலையைப் பாதுகாக்க 5 நாடுகள் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும்; சத்குரு வலியுறுத்தல்
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர்களில் இருந்து இமயமலையைப் பாதுகாக்க இந்தியா, நேபாளம் உள்ளிட்ட 5 நாடுகள் அடங்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரையில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாயமானவர்களில் ஈஷா சார்பில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அடங்குவர்.
இந்த நிலையில், தற்போது நேபாளத்திற்கு சென்றுள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, வெள்ளத்தில் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்திற்கு உதவும் விதமாக, நேபாளப் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: மலைகளுக்கு அரசியல் சார்போ அல்லது மொழிகளோ தெரியாது. இமயமலை என்பது பூமியின் மிக அற்புதமான ஒரு பகுதியாகும். அரசியல் எல்லைகளைக் கடந்து இமயமலைப் பகுதியைப் பாதுகாக்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து ஒரு வாரியத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.
எதிர்கால சந்ததியினருக்காக இமயமலைப் பாதுகாக்கப்பட வேண்டும். இது நேபாளத்தின் பிரச்னை, அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கினால் எப்போதுமே தீர்வு கிடைக்காது.
இந்தத் துயரமானது, இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு மட்டும் தான். உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கால பைரவ கர்மா சடங்கு நடத்தப்படும் என்று கூறினார்.
நல்ல கருத்து. இயற்கைக்கு நாடுகள் தெரியாது. நாடுகள்தான் ஒன்று சேர்ந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அழிவை யாராலும் தடுக்க முடியாது.
தர்மத்திற்கு கட்டுப்பட்டு தர்மராஜ் சொல்ல வேண்டும். எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. அறிவியலும் தெரியவில்லை.
முதலில் லட்சக்கணக்கில் காசு வாங்கிக்கிட்டு கைலாய மலைக்கு மக்களை கூட்டம் கூட்டமாக அழைத்து கொண்டு போவதை நிறுத்துங்கள் ஜக்கிஜி.
அங்கு யாரும் போகாமலிருந்தாலே போதுமே.
சரியான பதில் சகோதரா. யாரும் போகும் இருந்தால் அங்கு மனிதர்களால் தோன்றும் வெப்பம் ( வாகனங்கள் , சமையல் ஏரி வாயு , பேட்டரி , மின்சார சாதனங்கள் etc) வராமல் தடுக்கலாம் . இவர் 80 பேரை அதுவும் வெளிநாட்டவர்களை அங்கு அனுப்பியுள்ளார். இப்போ பயம் வந்து விட்டது. அவர்களின் குடும்பத்தார்கள் இவரை சும்மா விடுவதில்லை. வழக்கு போட்டாலும் போடலாம். இவர் இனிமேல் இமயமலை விவகாரத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். என்று தெளியும் இவரது பண தாகம்?
ஆமாம் கோவை காருண்யாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்.....
ஆன்மீக சுற்றுலாவில் வந்த அனைவரும் காப்பாற்றப் பட்டு விட்டார்களா என்ற செய்திக்காக மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள் .
மானோஸ்ரோவர்க்கு போக நுழைவு வாயில் போல ஆசிரமம் கட்டி மலை ஏறுபவர்கள் ஈஷா வழியாகத்தான் போக வேண்டும் என மலை ஆக்கிரமித்து, ஆற்றை ஆக்கிரமித்து கட்டிவச்ச கட்டிடம் தற்போது கபளிகரம் ஆயிபோச்சு..
முதலில், நேபாள் சென்ற, உமது பக்தர்களை காப்பாற்றும் உமது தவ பலத்தால்
இயற்கையை பாது காப்போம
முஸ்லிம் நாடான பாகிஸ்தானையும், கம்யூனிஸ்ட் சீனாவையும் பாதுகாப்புக்கு அழைத்தால் சிவன் கோபித்துக் கொள்ள மாட்டாரா,. இந்துக்கள் மனம் புண்படாதா
முதலில் ஈஷாவின் ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு பேசுடா... ஈஷா தியானமையத்தின் முகப்பில் மும்மதங்களின் சின்னம் சிலையாக வடிக்கப்பட்டு இருக்கு.. மேலும் வருடம் தோறும் மும்மதங்களின் ஆன்மீக பெரியோர்கள் வரவழைக்கப்பட்டு, தியானலிங்கத்துக்கு மும்மதங்களின் மந்திரங்கள், வாசகங்கள், பாங்கு ஓதி வழிபாடு செய்யப்படும்.. எதுவும் தெரியாமல் குலைக்காதே..