ஹரியானா பாடகர் கொலை வழக்கில் இருவர் சுட்டுக்கொலை
புதுடில்லி: ஹரியானா பாடகர் அங்கித் பால்யான் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிரபல ஹரியானா பாடகரான அங்கித் பால்யான் உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் 4 பேர் கொண்ட மர்மக் கும்பலால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கியக் குற்றவாளிகள் உ.பி. போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குற்றவாளியான சுமித் மற்றும் மோஹித் ஆகிய இருவரை கைது செய்ய முயற்சி செய்த போது தாக்குதல் நடத்தியதால், போலீசார் சுட்டுக் கொன்றனர். மீதமுள்ள கொலைக்கான மாஸ்டர்மைண்ட் மற்றும் இதர குற்றவாளிகளைப் பிடிக்க 4 மாநில போலீஸ் படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement