தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை (செப்.,01) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்டம்பர் 01), நாளை மறுநாள் (செப்டம்பர் 02) ஆகிய நாட்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 3ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
ponssasi - chennai,இந்தியா
31 ஆக்,2026 - 18:55 Report Abuse
திருவாண்ணாமலை மாவட்டத்துக்குட்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி சாத்தனுர் போன்ற பகுதிகள் பெரும் வறட்சி நிலவுகிறது, நானும் ஒருவாரமாக பார்க்கிறேன் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைபொழியும்னு தினம் தினம் வாநிலைமையம் அறிவிப்பு வெறும் கானல் நீராகவே போனது. கவனமாக அறிவியுங்கள் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement