இந்துகுஷ் மலைதொடரில் மிதமான நிலநடுக்கம்
காபூல்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று 4.9 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 147 கி.மீ., ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அம்மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்திய மற்றும் யூரேசிய தட்டுக்களின் மோதல் மண்டலத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால், குறிப்பாக அந்நாட்டின் இந்து குஷ் மலைத்தொடர் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement