காஸ் ஏஜென்சிகள் நுாதன மோசடி சிலிண்டர் விநியோகத்தில் ‘தில்லாலங்கடி’
காஸ் சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க இந்திய ஆயில் நிறுவனம் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, பதிவு செய்யும் சிலிண்டர் நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஓ.டி.பி., முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, நுகர்வோர் சிலிண்டர் பதிவு செய்ததும், அவரது மொபைல் போனிற்கு ஓ.டி.பி., எண்ணை ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. சிலிண்டரை டெலிவரி செய்பவரிடம் அந்த ஓ.டி.பி., தர வேண்டும். இதனால், பெரும் முறைகேடு தவிர்க்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால், ஆயில் நிறுவனத்தின் ‘ஓ.டி.பி.,’ முறையிலும் காஸ் ஏஜென்சிகள் சில மோசடி செய்து வருகின்றன. அவ்வாறு, நடராஜர் நடனமாடும் சிதம்பரம் நகரில் உள்ள காஸ் ஏஜென்சியின் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தால், உடனே ஓ.டி.பி., வந்துவிடுகிறது.
அடுத்த ஓரிரு நாளில் காஸ் நிறுவனத்தில் இருந்து நுகர்வோருக்கு போன் அழைப்பு வரும். அதில் பேசுபவர், உங்களுக்கு சிலிண்டர் வந்துள்ளது. ஓ.டி.பி.,யை சொல்லுங்கள் என்பார். நுகர்வோரும், உடனே சிலிண்டர் வந்துள்ள மகிழ்ச்சியில் ஓ.டி.பி.,யை கூறிவிடுகின்றனர்.
அந்த ஓ.டி.பி.,யை பதிவு செய்து, அந்த நுகர்வோருக்கு சிலிண்டரை வழங்காமல், வெளிநபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதே முறையில் 20 அல்லது 30 நாட்களுக்கு பிறகு ஓ.டி.பி., பெற்ற நுகர்வோருக்கு சிலிண்டர் ‘டெலிவரி’ செய்கின்றனர். இந்த நுாதன முறைகேட்டால், குறிப்பிட்ட காஸ் ஏஜென்சியின் நுகர்வோர் சிலிண்டர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சிலர், இந்த நுாதன மோசடி குறித்து கலெக்டரிடம் புகார் மனுவாக கொடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தினால், ஓ.டி.பி., முறையில் நடைபெறும் நுாதன மோசடியில் பல ஏஜென்சிகள்
@block_B@ பாக்ஸ் மேட்டர் ; சிலிண்டர் வாங்காமல் ஓ.டி.பி., தெரிவிக்க வேண்டாம் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டிற்கு சிலிண்டர் வந்தால் மட்டுமே ஓ.டி.பி., எண்ணை தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு சிலிண்டர் வந்து விட்டது, உங்களுக்கு மானியம் வந்து விட்டதா பார்க்கிறோம், இ.கே.ஓய்.சி., செக் செய்கிறோம் என, எந்த வகையில், ஏமாற்றி ஓ.டி.பி., எண் கேட்டாலும், தெரிவிக்க வேண்டாம். சிலிண்டரை வாங்காமல் தெரிவித்தால், நுாதன மோசடிக்கு நாமும் துணை போனதாகிவிடும். எனவே நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.block_B