கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம் 

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய, மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகரன், மாநகர தலைவர் வேலுசாமி, ரமேஷ், மணி, சுந்தரமூர்த்தி, ரவிக்குமார், வேலுமணி, ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.

வட்டார தலைவர்கள் சீதாராமன், ராமகிருஷ்ணன், ராஜா, ஜனார்த்தனன், நிர்வாகிகள் முருகன், குமார், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு தலைவர் வேலு, கல்பனா, சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்

. உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது சமூக பாகுபாட்டை வெளிப்படுத்தியதை கண்டித்து குரல் எழுப்பிய காங்., எம்.பி., ராகுல் மீது பொய் வழக்கு பதிவு செய்த உத்தரகாண்ட் மாநில பா.ஜ., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Advertisement