ஸ்ரீசத்ய சாய் சேவா – சாஸ்த்ரா பல்கலை நடத்தும் இலவச தொழிற் பயிற்சி 

திருப்பூர், செப். 2– 

ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு,  சாஸ்த்ரா பல்கலை மற்றும் பஜாஜ்  ஆட்டோ  நிறுவனம் ஆகியன  இணைந்து இளைஞர்களுக்கான இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. 



பஜாஜ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு  திட்டத்தில் அந்நிறுவனம் இப்பயிற்சியை வழங்குகிறது. இதில்,  80 சதவீத நடைமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழிற்துறை தரத்திலான கருவிகள் கொண்ட ஆய்வகத்தில் நேரடி பயிற்சி வழங்கப்படும். மேலும்  பயிற்சி, உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசம். இதில், 18 –- 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 



பயிற்சி மற்றும் தகுதி, இருசக்கர வாகன சர்வீஸ்  பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி,  இருசக்கர வாகனம்  இ.வி. பிரிவுக்கு பிளஸ் 2 (இயற்பியல், வேதியியல், கணிதம்) தேர்ச்சி பெற்றோர். ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படிப்பு  (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்)  முடித்தவர்கள்.  ஐ.சி.இ. வாகனம் பயிற்சி – 3 மாதம் பயிற்சி மற்றும்  ஒரு மாதம் பணியுடன் கூடிய பயிற்சி. இ.வி. வாகனம் – 2 மாதம் பயிற்சி  மற்றும் ஒரு மாதம் பணியுடன் பயிற்சி.



பயிற்சி வகுப்புகள் சென்னை மற்றும் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலை வளாகங்களில் நடைபெறும். பயிற்சி முடித்தவர்கள் பிராண்டட் சேவை மையங்களில் பணியில் சேரலாம் அல்லது சொந்த தொழிலை துவங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, சாய் ஸ்ரீதர், மாநில ஒருங்கிணைப்பாளர் திறன் வளர்ப்பு மையம், மொபைல் எண்: 80560 39285 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement