விவசாயிகள் போராட்டம்

மதுரை: தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்க கோரி மதுரை நீர்வளத்துறை அலுவலகத்தில் தென் மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கப் பொதுச் செயலாளர் அர்ச்சுணன், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் கிடைக்காவிட்டால் தொடர்ந்து இரவிலும் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement