கூட்டு முயற்சியால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவோம்; அமைச்சர் அருண்ராஜ் உறுதி
சென்னை: டெங்குவை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; கூட்டு முயற்சியால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவோம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
டெங்குகாய்ச்சல் பரவல் குறித்து சட்டசபையில் கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் அளித்த பதில்: கடையநல்லூரில் டெங்கு பரவல் குறித்து கோரிக்கை வைத்த உடனே மருத்துவ குழுவை அனுப்பி தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு தான் இருக்கிறோம். இதனை கூட்டு முயற்சியால் மட்டுமே தடுக்க முடியும். அரசால் மட்டுமே செய்ய முடியாது. மக்களிடமும் பொறுப்பு இருக்க வேண்டும்.
எம்எல்ஏக்களும் அவர்களுடைய தொகுதியில் மழை நீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
உயிரிழப்புகள் ஏற்படுவது ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. வரும் காப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். கொசு உற்பத்தி நமது வீடு மற்றும் வீடுகளின் அருகே சுற்று வட்டாரத்தில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை நிறைய சேமித்து வைப்பதால், அதில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தி ஆகிறது. இந்த தண்ணீர்களை மூடி வைக்க வேண்டும்.
கொசுக்களை ஒழிக்கும் பணியாளர்கள் நமது வீட்டிற்கு வரும் போது மக்களும் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களை வீட்டில் பார்வையிட செய்து, தண்ணீர்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி, கொசு மருந்து அடிப்பது தேவையாக இருக்கிறது. பகலில் கடிக்கும் கொசுவால் தான் டெங்குகாய்ச்சல் ஏற்படுகிறது. அனைவரும் சேர்ந்து கூட்டு முயற்சியால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக சட்டசபை இன்றைய கூட்டத்தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை