நியூயார்க் வங்கி பெண் உயரதிகாரி குத்திக்கொலை; கொலையாளியை சுட்டுக்கொன்ற போலீசார்
வாஷிங்டன்: நியூயார்க்கில் வங்கி பெண் உயரதிகாரி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில், 'பேங்க் ஆப் அமெரிக்கா'வின் துணைத் தலைவரும், ஐவி லீக் பட்டதாரியுமான எரின் பியாசென்டி கொல்லப்பட்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் போர்தாம் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற இவர், மகப்பேறு விடுப்பு முடிந்து அண்மையில் தான் வேலைக்குத் திரும்பியுள்ளார்.
வங்கி அதிகாரியை கத்தியால் குத்திக் கொன்றவர் பமீலா சிஸ்னெரோஸ்,49, என்பது தெரிய வந்தது. தான் வைத்திருந்த ஷாப்பிங் பையில் இருந்த இரு கத்திகளை எடுத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 68 வயது முதியவர் ஒருவரும் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளி சிஸ்னெரோஸை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் சரியில்ல நபர் என்ற தொனியில் இதை விட்டு விலகி போக முடியாது பின்னாடி இருக்கும் கரணம் கண்டறியப்படவேண்டும் எத்தனையோ ஆட்கள் இருக்க உலகின் மிக பெரிய வங்கியின் உயர்மட்ட அதிகாரி வேறு, வெறி வேறு ரூபத்தில் தப்பி விடக்கூடாதுமேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை