உ.பி.,யின் கண்டக் நதியில் அடித்து வரப்பட்ட நேபாளிகள் 5 பேரின் உடல்; போலீசாரிடம் ஒப்படைப்பு
லக்னோ: உத்தரபிரதேரசம் கண்டக் நதியில் நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளையில், நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வால்மீகி நகரில் உள்ள கண்டக் அணையிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கண்டக் நதியில் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களின் உடல்கள் அடித்து வரப்பட்டன. இந்த 5 உடல்களும் மீட்கப்பட்டு, சோனவுலி எல்லையில் நேபாள போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை புத்வாலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
4 கடைகளில் பூட்டு உடைப்பு 6 பேட்டரிகள் திருட்டு
-
விழுப்புரத்தில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
-
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
-
கூலி தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை
-
எதிர்பார்ப்பு உள்ளாட்சிகளில் நியாயமான வார்டு வரையறை மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு தேவை
-
பேனர் செயல்படுத்துங்க செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்கள் குற்றச் செயல்களை கண்காணிக்க தேவை