4 கடைகளில் பூட்டு உடைப்பு 6 பேட்டரிகள் திருட்டு

செஞ்சி: நான்கு கடைகளின் பூட்டை உடைத்து வாகன பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 3 கி.மீ., தொலைவில் விநாயகபுரம் கூட்ரோடு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா கடை, பேட்டரி கடை, பாணி பூரி கடை, ஆட்டோ மொபைல் கடை என நான்கு கடைகளின் பூட்டையும், ஷட்டரையும் ஒருபக்கம் உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள், திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பேட்டரி கடையில் இருந்த 5 பைக் பேட்டரிகளையும், ஒரு டிராக்டர் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மற்ற கடைகளில் எதுவும் திருடு போக வில்லை.

திருட்டு நடந்த கடைகளில் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர் கல்பனா தலைமையில் கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

Advertisement