செயல்படுத்துங்க செயல்பாட்டிற்கு வராத செக் போஸ்ட்கள் குற்றச் செயல்களை கண்காணிக்க தேவை
ராஜபாளையம்:
மாவட்டத்தில் குற்ற செயல்களை கண்காணிக்க போலீசாரால் அமைக்கப்பட்ட செக்போஸ்ட்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் பெருக்கம் குற்றச் செயல்களின் வாய்ப்புகள் அதிகரிக்கும் பகுதிகளில் இச்செயலில் ஈடுபடுவோரை எளிதாக கண்காணிக்கவும், சந்தேகிக்கும் வகையில் வரும் நபர்களை வாகன சோதனை மூலம் அறிந்து கொள்ளவும் செக்போஸ்ட்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு போலீசிற்கு தனி அறையுடன் கூடிய சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகளால் விமரிசையாக தொடங்கி வைக்கப்படும் இவை போலீசார் பற்றாக்குறையால் செயல்பாடு இன்றி காட்சி பொருளாக மாறுவதுடன் அமைப்பதன் நோக்கம் வீணாகிறது.
மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டவிரோத செயல்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பொது அமைதிக்கு பாதிப்பினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரங்களில் கண்காணிப்புக்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு சமத்துவபுரம் அருகில், முடங்கியார் ரோடு தென்றல் நகர் விலக்கு, மலையடிப்பட்டி முக்கு ரோடு, சேத்தூர் மலையடிவாரப் பகுதிகளுக்கு செல்லும் வழியில் தென்னை விவசாயிகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட செக்போஸ்ட் உள்ளிட்டவைகள் பயன்பாட்டிற்கு வராமல் போலீஸ் பற்றாக்குறை காரணமாக முடங்கியுள்ளன.
இதே நிலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ஏற்பட்டுள்ளது. விமர்சையாக தொடங்கி சில நாட்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் நீண்ட காலம் இந்த செக்போஸ்ட்கள் மூடப்பட்டு காட்சி பொருளாக மாறுகின்றனர்.
சமீப நாட்களாக குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் மூடப்பட்டுள்ள செக்போஸ்ட்களை மீண்டும் திறந்து கண்காணிப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்