கூலி தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: கூலி தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 47; கூலி தொழிலாளி. கடந்த ஜூன் 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற இவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement