டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து; முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்; விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டசபையில் விதி 110ன் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்புகள் வெளியிட்டு பேசியதாவது:
* திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ. 547 கோடியில் செயல்படுத்தப்படும்.
* சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ. 1,850 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 110 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ. 165 கோடியில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் ரூ. 275 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத்திட்டமாக செயல்படுத்தப்படும்.
* மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடியில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ. 960 கோடியில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ. 236 கோடி செலவிடப்படும்.
* ரூ.4,800 கோடியில் வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக் கும் திட்டம் அமைக்கப்படும்.
* ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
* சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
* திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ. 130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவிலும், மொத்தம் ரூ. 305 கோடி செலவில் அமைக்கப்படும்.
* புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ. 335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 36 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ. 8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்
* கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி செலவிடப்படும்.
* சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும்.
* ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.
* போக்குவரத்து தொடர்பான அனைத்து அலுவலக சேவைகளுக்கும், எந்த இடத்திலும் பதிவு, லைசென்ஸ் என்ற முறையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* புதிய வாகனம் வாங்குவோர் Digital RC- இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.
* கடந்த 2021ம் ஆண்டு மே முதல் 2026ம் ஆண்டு ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
* ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
* விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்.
* திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
பிரத்யேக வீடியோ!
ஆசிரியர்கள், விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (5)
GMM - KA,இந்தியா
02 செப்,2026 - 15:20 Report Abuse
திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவை. சிறு அறிவிப்புகள் பயனற்றவை. டாஸ்மாக் மூடல். கள்ளு கடை திறப்பு. பின் மொத்தமாக மூடல். இந்தி மொழி பேச பயிற்சி. படிக்க எழுத கற்று தர வேண்டாம். தேசியத்திற்கு எதிரான திமுக மசோதாவை நீக்குதல். நிறுத்தி வைத்தல். அண்டை மாநில நல்லுறவு பிரிவு அலுவலகம் திறப்பு. தினசரி பத்திரிகை வீட்டு டெலிவரி. ஏன் ஆவின், ரேஷன் பொருள் டெலிவரி பண்ண முடியாது? கோவிலை விட்டு அரசு வெளியேறி, பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். செல்வந்தர்கள் சொத்தை கோவிலுக்கு தானம் செய்யும் முறை வளரும். அரசு போக்குவரத்தில் பயணம் இலவசம் என்றால், தனியார் நிறுவனங்கள் இழப்பை ஈடு செய்ய வழி காண வேண்டும். தாமிர ஆலை திறக்க வேண்டும். நீதிபதி அருணா அறிக்கையை அதிகாரிகள் குழு அமைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். 0
0
Reply
Raja k - ,இந்தியா
02 செப்,2026 - 14:32 Report Abuse
அப்போ மோடி காலியா? பாஜகவின் வேட்பாளர் விஜய் ஆ? ஆர்எஸ்எஸ் விஜயின் பின் இருக்கிறது என்பது உண்மைதான் 0
0
Reply
V. Rajan - ,இந்தியா
02 செப்,2026 - 12:47 Report Abuse
அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறைந்துள்ளது . மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது . ஊழல் வாதிகளை ஜெயிலுக்குள் தள்ள மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் இன்னும் கோவையில் அரசு ஊழியர்கள் சிலர் பிச்சை எடுக்கிறார்கள் . கேட்டால் , ஏற்கனவே பல லட்சம் கொடுத்து பனி மாறுதல் வாங்கி உள்ளார்களாம் . மின்சாரவாரியம் , மாநகராட்சி, தொழிற்சாலை ஆய்வாளர்கள் லஞ்சம் கேட்டு நச்சரிக்கிறார்கள் . போலீஸ் கொஞ்சம் இவர்களை கவனிக்க வேண்டும் . விழிப்புணர்வு பரவட்டும் . 0
0
Reply
SUBBU,MADURAI - ,
02 செப்,2026 - 12:34 Report Abuse
அடேய் தவெக தற்குறிகளா இதையே சாக்காக வைத்து உண்மையான போர்ஜரி குற்றவாளிகளையும், கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளையும் வெளியே விட்ராதீங்கடா! 0
0
Karthik - Dindigul,இந்தியா
02 செப்,2026 - 13:52Report Abuse
கொஞ்சம் நாகரீகமா சொல்லியிருக்கலாம். 0
0
Reply
மேலும்
-
போஸ்டர்
-
உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி ஆதி திராவிட நல விடுதியில் உணவு சமைக்காததால் அப்பகுதியை சேர்ந்த நபர் ஓட்டலில் இருந்து பரோட்டா வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
-
தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.1.66 லட்சம் அபேஸ்
-
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு ரேஷன் பொருட்கள்
-
பாக்கம் கன்னிக்கோவிலில் நாளை தீமிதி திருவிழா
-
வெங்கட்டா நகர் பூங்கா ‘டோட்டல் டேமேஜ்’ சீரமைக்குமா உழவர்கரை நகராட்சி
Advertisement
Advertisement