பாக்கம் கன்னிக்கோவிலில் தீமிதி திருவிழா
புதுச்சேரி: கிருஷ்ணாபுரம் அடுத்த பாக்கம் கன்னிக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த பாக்கம் கன்னிக்கோவிலில், பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழா (4ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.
இதையொட்டி, காலை 8:00 மணிக்கு விநாயகர், முருகர், மன்னாதீஸ்வரர், பச்சைவாழி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பாலமுருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு அங்குள்ள குளக்கரையில் அக்னி கரகம் ஜோடிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து தீமிதி திருவிழா நடக்கிறது.
ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துவர். விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் வேணுகோபால், பொருளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை