தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.1.66 லட்சம் அபேஸ்
விழுப்புரம்: பழக்கடை தொழிலாளியை ஆன்லைனில் நுாதனமாக ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அகில்தாஸ்,38; இவர் பழக்கடை ஒன்றில் பணிபுரிகிறார்.
இவர் கடந்த ஆக., 29 ம் தேதி தனது மொபைலில் பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருந்த போது, ‘ஆல் டிவி சேனல் இலவசம்’ என்ற லிங்க் வந்துள்ளது.
இந்த லிங்கை அகில்தாஸ் தொட்டதும், இதற்கான ஆப் இவரின் ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோடு ஆகியுள்ளது.
பின், ஆண்ட்ராய்டு சிஸ்டம் சாப்ட்வேர் அப்டேட் என்ற மெசேஜ் வந்தவுடன் அகில்தாசின் ஜி பே ஆப் வேலை செய்யாமல் நின்றது.
இதையடுத்து, கடந்த 31ம் தேதியில் இருந்து 1ம் தேதி வரை அகில்தாஸ் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் 5 தவணைகளாக மர்ம நபர் இவரின் யுபிஐ., ஐ.டி.,க்கு நுாதனமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளார். தான் பணத்தை இழந்த விஷயம் தெரிந்த அகில்தாஸ், இது குறித்து நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை