செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா

புவனேஸ்வர்: செஸ் தரவரிசையில் இடம் பெற்ற இளம் வீராங்கனை என சாதனை படைத்தார் இந்தியாவின் எலெனா.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு 'பிடே' சார்பில் செப்டம்பர் மாத தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ஒடிசா மாநிலத்தின் சிறுமி எலெனா சர்மா (4 வயது, 6 மாதம், 16 நாள்) இடம் பெற்றிருந்தார்.
சமீபத்தில் இங்கு நடந்த 'பிடே' தரவரிசை தொடரில் பங்கேற்ற எலெனா, 1432 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து, 'பிடே' தரவரிசையில் இடம் பெற்ற இளம் வீராங்கனை என வரலாறு படைத்தார்.
ஒட்டு மொத்தமாக இளம் வயதில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர் என, மகாராஷ்டிராவின் சர்வாக்யா சிங் குஷ்வாஹா (3 வயது, 7 மாதம், 20 நாள், 2025 டிசம்பர்) சாதனை படைத்துள்ளார்.

Advertisement