வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 03) ஆபரண தங்கம் கிராம், 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும்; சவரன், 1 லட்சத்து 13 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (செப் 04), தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சிறப்பு வீடியோ!
வார கடைசி நாளில் தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி; நகை வாங்க ரெடியா; இன்றைய விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கடந்த வாரமும் இறுதி நாளில் இந்த வாரமும் சரிந்து உள்ளது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்