கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்

1

சென்னை: கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.

நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏஐ காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி.

அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசியர்கள் தினத்தில் உறுதி கொள்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement