மின் வாரியத்தில் ஒரே சமயத்தில் 24 தலைமை பொறியாளர்கள் நியமனம்
சென்னை, செப். 8-
தமிழக மின் வாரியத்தில், முதல் முறையாக காலியாக உள்ள, 24 தலைமை பொறியாளர் பதவிகளுக்கு, மேற்பார்வை பொறியாளர்களாக இருப்பவர்களில், பணி மூப்பு அடிப்படையில், 24 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக மின் வாரியமானது, மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் போன்ற நிறுவனங்களாக செயல்படுகிறது.
அவற்றின் தலைவரான ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கீழ் மேலாண் இயக்குநர்கள், இயக்குநர்கள் பதவிகளுக்கு அடுத்து, தலைமை பொறியாளர் பதவிகள் முக்கியமானவை. அந்த பதவியில், 40 பணியிடங்கள் உள்ளன.
அதன்படி, மின் கொள்முதல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவும், தலா ஒரு தலைமை பொறியாளரின் கீழும், 12 மண்டலங்கள் தலா ஒரு தலைமை பொறியாளரின் கீழும் செயல்படுகின்றன.
இந்த பதவிகளில் காலியிடங்களுக்கு ஏற்ப, மேற்பார்வை பொறியாளர்களாக பணிபுரிவோர், பணி மூப்பு அடிப்படையில், தலைமை பொறியாளர் களாக நியமிக்கப்படுவர் . தற்போது, மின் தொடரைமப்பு திட்டங்கள் உள்ளிட்ட, 24 தலைமை பொறியாளர்கள் பதவிகள், ஒவ்வொன்றும் கடந்த மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை காலியிடங்களாக உள்ளன.
விரைவில் மழைக்காலம் தொடங்குவதால், காலியிடங்களை நிரப்பும்படி பணியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, காலியாக உள்ள, 24 தலைமை பொறியாளர் பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும்
-
திடீர் தீ விபத்து: கடை எரிந்து சேதம்
-
வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம்: அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட எஸ்.பி.,
-
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டி
-
வெளிநாட்டிற்கு அனுப்பும் போலி ஏஜன்ட்டுகள் குறித்து அறியாமை; கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
-
வெறி நாய்கள் தொல்லை
-
சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் அச்சம்