பழனி கோவில் மேம்படுத்தப்படும் அமைச்சர் ரமேஷ் உறுதி

சட்டசபையில் நேற்று பேசிய அ.தி.மு.க., - ரவி மனோகரன், ''பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, பல மைல் துாரம் நடந்து பழனிக்கு வருகின்றனர். ஆனால், மாசுபட்ட நகரமாக, பழனி மாறி விட்டது. புனிதமான நகரமாக பழனியை உருவாக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், ''பழனி கோவில் திருப்பணி, அன்னதானக் கூடங்கள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, எம்.எல்.ஏ.,வும் உடன் இருந்தார்.

''நாடே திரும்பி பார்க்கும் வகையில், 'மாடர்ன்' திருக்கோவிலாக, பழனி கோவிலை மேம்படுத்துமாறு முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.

''நிச்சயமாக, அனைத்து பணிகளையும் முடித்து, மிகச்சிறப்பாக பழனி கோவில் மேம்படுத்தப்படும்,'' என தெரிவித்தார்.

Advertisement