தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
மதுரை: தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஊழல் வாதிகளுக்கு தான் பாதுகாப்பு கிடையாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. இது குறித்து யாரும் பேசவே இல்லை. தவெக-காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் கிடையாது. பிரதமர் விஜய் என்து ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே. நமது அரசு மக்களுக்கான அரசு. எப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியாக செய்வோம்.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஊழல் வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை. திங்கள் கிழமை முதல்வர் பதிலுக்கு பிறகு 2 மானிய கோரிக்கை நடக்கும். ஒவ்வொரு நாளும் சட்டசபை 7 மணி நேரம், 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை; முந்தைய அரசு செய்த எந்த தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம்.
நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பார்கள். வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (11)
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
05 செப்,2026 - 17:42 Report Abuse
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, திராவிட கட்சி ஆட்சியாளர்கள் ஊழலில் ஊறித் திளைத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் எனக் கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள தவெக, என்றென்றும் அதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க கடமைப்பட்டுள்ளது. அப்போதுதான் தவெக அரசு ஊழல்வாதிகளுக்கு எதிரானது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும். 0
0
Reply
சந்துரு - ,
05 செப்,2026 - 14:31 Report Abuse
நீங்கள்தான் உலகமே புகழும் வண்ணம் சோசப்பு விசயண்ணா தலைமையில் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறீர்களே? அப்புறம் அ.தி.மு.க,தி.மு.க சேர்ந்தால் என்ன? அவர்களுடன் டொனால்ட் டிரம்ப் சேர்ந்தால் என்ன? எதற்கு தினம், தினம் அதை நினைத்தே பயந்து கொண்டு இருக்கிறீர்கள்? 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
05 செப்,2026 - 14:17 Report Abuse
ஊழல் வாதிகள் பல நூறு ,ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்கள் .அவர்களுக்கு என பண, ,வக்கீல்கள் படை மிக பாதுகாப்பாக இருக்கிறது 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
05 செப்,2026 - 14:03 Report Abuse
இது திமுக அரசே செய்திருக்கவேண்டியது, அப்படி செய்திருந்தால் அரசுக்கு கொஞ்சம் நற்பெயர் கிடைத்திருக்கும் இரண்டாவது சில ஆதாரங்களை கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டிருக்கலாம். நேருவுக்கு பயந்து ஸ்டாலின் அதை செய்யாமல் விட்டுவிட்டார். கடந்த காலங்களில் இருவரையும் அண்டர் ground கேம் ஆடியிருக்கிறார்கள் விஜய் அதை செய்யமாட்டார் என நினைக்கிறேன் 0
0
Reply
பிரேம்ஜி - ,
05 செப்,2026 - 13:29 Report Abuse
சும்மா அறுந்து நைந்து போன ரீலையே திரும்ப திரும்ப ஓட்டுவதற்கு வேலையை மட்டும் செய்யுங்கள் 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
05 செப்,2026 - 13:25 Report Abuse
மந்திரி ,குற்றம் புரிந்தவனை போல ,பம்மி பம்மி பேசுகிறார் . இவர் ஒரு மந்திரி என யாரவது அவருக்கு நினைவு படுத்துங்கள். கால கொடுமை. 0
0
Reply
Nesan - JB,இந்தியா
05 செப்,2026 - 13:23 Report Abuse
எல்லாம் கண்தொடைப்பு. பின்னெ ஏன் பன்னைவீட்டில் தரகர் ஆலோசனை?. 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
05 செப்,2026 - 11:59 Report Abuse
பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் போதை அரக்கன் செய்த காரியம் - ஆரணி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..... 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
05 செப்,2026 - 11:27 Report Abuse
இந்த வாய் தான் திமுக பாஜ பக்கம் போய்விடும் என்று சொன்னது! 0
0
Reply
ஈசன் - ,
05 செப்,2026 - 11:17 Report Abuse
அமைச்சரே, இரு திராவிட கொள்ளை கூட்டத்திற்கு இடையில் தான் பழிவங்குதல்கள் நடக்கும். நீங்கள் தான் புதியவர்கள் ஆயிற்றே. இதில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement