சிறுமி தற்கொலை
சாத்துார்:சாத்துார் படந்தால் திருப்பதி நகரை சேர்ந்தவர் முனிஸ்வரன் 17 வயது மகள் ப்ளஸ் 2 படித்து வந்தார். நீண்ட நேரம் அலைபேசியில் வாலிபர் ஒருவருடன் பேசி உள்ளார். பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்களிடம் ரூ 2.82 லட்சம் பணம் மோசடி
சாத்துார்:சாத்துார் வேட்டை மலையை சேர்ந்தவர் முத்தழகர் மனைவி நித்யா 24. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவதாக பேசிய நபர் ஏ.டி.எம் கார்டு புதுப்பிக்க ஓ.டி.பி.
வரும் அந்த நம்பரை கேட்டு உள்ளார். நித்தியா ஒ .டி .பி நம்பர் சொல்லவும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 1,39,900 பணம் மூன்று தவணையாக எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சாத்துார் நந்தவனப் பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவர் மனைவி யோகலட்சுமி 25. வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிப்பது குறித்து ஆன்லைனில் வேலை தேடி உள்ளார். அப்போது அலைபேசியில் இவரை தொடர்பு கொண்ட அசாமி சான் யா, நீலம் பவ சார், ரிச்சர் சன் பாக்ஸ்லா, மா குமார்,ஆகியோர் கூகுள் மேப்பில் ரிவீவ் அண்ட் ரேஷன் செய்யும் டாஸ்க் மூலமும், என்எஸ்சி கோல்டு சேர்ஸ் சில் பங்குகள் வாங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறி பல தவணைகளாக ரூ 1, 43,000 வாங்கியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யோகலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்தது; ஈரானில் 11 பேர் பலி
-
சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
-
பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளி
-
2026ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் நாட்டின் பெண் ஜோஹெய்ரி மோலா!
-
நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும்!
-
அரசு பள்ளி மாணவனும் ராணுவ அதிகாரி ஆகலாம் கனவை விதைக்கும் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ரா