விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்தது; ஈரானில் 11 பேர் பலி

1

டெஹ்ரான்: ஈரானில் சாலை விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த எரிபொருள் டேங்கர் லாரி விபத்தில் சிக்கியது. இதில் லாரி வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

சனந்தாஜ் மற்றும் ஹமேதான் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எரிபொருள் டேங்கர் லாரியின் பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சனந்தாஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

லாரி மோதி வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ, அருகில் இருந்த பல வாகனங்களுக்கும் பரவி அவை தீப்பற்றி எரிந்தன. இதுவே உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement