ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமத்தில் ஆசிரியர் தின விழா
விருத்தாசலம்: ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தில் ஆசிரியர் தின விழா நடந்தது.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவிற்கு, கல்விக் குழும தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இயக்குநர் அனிதா ஜெயசங்கர் முன்னிலை வகித்தார்.
விழாவில் பேசிய ஜெய்சங்கர் ‘ஒரு மாணவனின் வாழ்க்கையில் அறிவை மட்டும் வழங்குபவர் ஆசிரியர் அல்ல, நல்ல மனிதனாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் உருவாக்கும் சிற்பி ஆசிரியர். மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் அளப்பறியது’ என்றார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஜெயப்பிரியா பள்ளிகளின் செயலாளர் சிந்து, தலைமை முதல்வர் அந்துவன் கேப்ரியல், முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், ஜெயப்பிரியா பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள், 8 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
இடது கையில் காயம் வலது கைக்கு எக்ஸ்ரே டாக்டர் பரிந்துரையால் பரபரப்பு
-
தேசிய வளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவருக்கு தங்கம்
-
பல்கலையில் புதிய தொழில்முனைவோர் மையம் துவக்கம் 3 மணி நேரத்தில் ரூ.96,000 ஈட்டி அசத்திய மாணவர்கள்
-
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
-
ஜிப்மரில் எலும்பியல் தொற்று மேலாண்மை தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
-
நீர்வரத்து வாய்க்காலில் குவியும் குப்பைகள்