நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வில்லியனுார்: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், ஊசுடு தொகுதி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி பத்துக்கண்ணு ஊசுடு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் ரூ.7 லட்சம் மானிய தொகையில், முதல் தவணையாக ரூ.2.75 லட்சம் வீதம் 38 பயனாளிகளுக்கு ரூ.10.45 லட்சமும், மூன்றாவது தவணையாக ரூ.1 லட்சம் வீதம் பயனாளிகளுக்கு  நிதியுதவிகளையும், மகப்பேறு உதவித் தொகை பெறும் 27 பயனாளிகளுக்கு தலா ரூ.18 ஆயிரம் பெறுவதற்கான நிதி ஆணையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

 நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஊசுடு தொகுதி பல்வேறு பகுதியை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement