பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

திருப்பாச்சேத்தி, செப்.6-–

திருப்பாச்சேத்தி அருகே செம்பராயனேந்தலில் பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கிராமப்புறங்களில் பொதுமக்களின் குடிநீர் மற்ற பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைத்து பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது. பாசிகள் சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் பிடிக்க வரும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

மேலும் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் தொடர்ச்சியாக கசிந்து வீணாகி வருகிறது. செம்பராயனேந்தலில் வருட கணக்கில் குடிநீர் தொட்டி பராமரிக்கவே இல்லை . பாசி படர்ந்த தரைப்பகுதியால் தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் அதிகளவில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

Advertisement