ரத்தனா பள்ளியில் ஆசிரியர் தின விழா

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் ராமகிருஷ்ணன், இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், தேவநாதன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வாழ்த்திப் பேசினார். பள்ளி முதல்வர் ரவி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement