செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி தலைமையில் தனியார் மண்டபத்தில் நடந்தது. தலைமை பிரதிநிதிகள் எம்.பி., செல்வம், பிரபு கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி பங்கேற்று புதிய கட்சி மாவட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சாமிநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement