உதயநிதிக்கு முதல்வர் விஜய் தக்க பதிலுரை அளிப்பார்; அமைச்சர் அருண்ராஜ் உறுதி

8

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு, முதல்வர் விஜய் தக்க பதிலுரை அளிப்பார் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை சார்பில், சென்னையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிருபர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பேசியதை, யாராவது முதல்முறை கேட்கும் போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரொம்ப சிறப்பாக இருந்தது மாதிரியும்,
இந்த தவெக ஆட்சியில் 100 நாட்களில் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிற மாதிரியும், தெரிவித்தார்.

முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அமைச்சர், எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, சட்டசபையில் நாம் பேசும் போது மக்கள் எல்லோரும் நேரலையில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். சமூகத்தில் என்ன பிரச்னை இருக்கிறதோ, அது குறித்து பேச வேண்டும். அதுதான் மக்கள் மத்தியில் எடுபடும். மக்கள் அனைவரும் இப்பொழுது நன்றாக இருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கிற்காக நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு இருக்கிறோம்.
அப்படி இருக்கும் போது இப்பொழுது தான் சீர்குலைந்த மாதிரி திட்டமிட்டு அந்த நாளில் முதல்வர் விஜய் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அப்படி பண்ணி இருக்கிறார். மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் அப்படி பேசவில்லை. உதயநிதிக்கு, முதல்வர் விஜய் தக்க பதிலுரை அளிப்பார். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.


@block_G@

நாளை அனல் பறக்கும்!

எம்எல்ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டசபையில் திங்கட்கிழமை பதில் அளிப்பேன். ஆனால் அன்று யாரும் ஓடி விட மாட்டோம் என்று பிராமிஸ் செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இதனால் நாளை (செப் 06) திங்கள் கிழமை சட்டசபையில் விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.block_G

Advertisement