வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வரவேற்றார்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது வரலாற்று, சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதோடு, கல்வி, கலாசாரம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Tamil News
Tamil News
Tamil News
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வரவேற்றார். அசாம் முதல்வர் ஹமந்த பிஸ்வ சர்மா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அசாம் மாநிலம் குவாஹத்தி கீதா நகர் கல்லூரியில் நடக்கும் பொன் விழா, ஸ்ரீமந்த சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலை பட்டமளிப்பு விழாவில் இன்று சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

குவாஹத்தி பல்கலையில் நாளை நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதைத் தொடர்ந்து, ஷில்லாங் செல்லும் துணை ஜனாதிபதி, சோசோ தாம் கலையரங்கில் நடக்கும் பொது வரவேற்பு மற்றும் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை மறுநாள், இம்பால் மொய்ராங் ஐ.என்.ஏ., அருங்காட்சியகம், போர் நினைவிடம் மற்றும் சைனிக் பள்ளியை பார்வையிடுகிறார்.
அதைத் தொடந்து, 9ம் தேதியன்று இட்டா நகர் செல்லும் அவர், அருணாசல பிரதேச சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், இட்டாநகரில் உள்ள, 'நைதர் நம்லோ', ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம் மற்றும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான டோனி போலோ மிஷன் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிடுகிறார்.

Advertisement